சங்ககிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நேர்முகத் தேர்வு
எடப்பாடி வட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி விண்ணப்பித்தோருக்கான நேர்முகத் தேர்வுகள் சங்ககிரி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது
சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார்பில் சங்ககிரி, எடப்பாடி வட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி விண்ணப்பித்தோருக்கான நேர்முகத் தேர்வுகள் சங்ககிரி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற வேண்டிய நேர்முகத் தேர்வினை தீநுண்மி தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையையடுத்து சேலம், ஆத்தூர், மேட்டூர், சங்ககிரி உள்ளிட்ட வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகங்களில் நடத்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவிட்டுள்ளார்.
அதனையடுத்து சங்ககிரி, எடப்பாடி வட்டங்களைச் சேர்ந்த முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், மூன்று சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் ஆர்.பாலாஜி தலைமையில் நேர்முகத் தேர்வு நடைபெற்றது.
Advertisement
Advertisement
இதில் நேர்முகத்தேர்வில் பங்கேற்றவர்களை எடப்பாடி அரசு மருத்துவர் பாலாஜி மருத்துவ பரிசோதனைகளை செய்தார். சங்ககிரி வட்டாட்சியர் எஸ்.விஜி, சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலர் கே.சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். நேர்முகத்தேர்வில் 33 பேர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.