ஊணாம்பாளையம் கிராமத்தில் நடமாடும் மருத்துவமனை சார்பில் சிகிச்சை
ஊணாம்பாளையம் கிராமத்தில் தமிழக அரசின் நடமாடும் மருத்துவமனை வாகனத்தின் மூலம் கிராமங்களுக்கு நேரில் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர் மருத்துவ குழுவினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த ஊணாம்பாளையம் கிராமத்தில் தமிழக அரசின் நடமாடும் மருத்துவமனை வாகனத்தின் மூலம் கிராமங்களுக்கு நேரில் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர் மருத்துவ குழுவினர்.
சிங்காரப்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் குமார் தலைமையில் கிராமங்கள்தோறும் சென்று பொதுமக்களுக்கு மழைக்காலங்களில் ஏற்படும் சளி, காய்ச்சல், இருமல், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தொண்டை நோய், கரோனா பரிசோதனை என பல்வேறு நோய்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றனர். வீடு தேடி வந்து மருத்துவம் பார்த்ததால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.