தற்கொலைக்காக ரயில் தண்டவாளத்தின் நடுவே அமர்ந்து இருந்த இளம் பெண் மீட்பு
தற்கொலை செய்துகொள்ளவதற்காக, ரயில் தண்டவாளத்தின் நடுவே அமர்ந்து இருந்த இளம் பெண்ணை ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் மீட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்: தற்கொலை செய்துகொள்ளவதற்காக, ரயில் தண்டவாளத்தின் நடுவே அமர்ந்து இருந்த இளம் பெண்ணை ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் மீட்டனர்.
ராஜபாளையத்தை அடுத்த சத்திரப்பட்டி ரயில்வே கேட் அருகே தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தில் சுமார் 34 வயதுடைய இளம் பெண் ஒருவர் தண்டவாளத்தின் நடுவே அமர்ந்து ரயிலின் வரவை எதிர்பார்த்து காத்திருப்பதாக அந்த பகுதியைச் சேர்ந்த கீ மேன் சபரிமலை என்பவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
தகவலை அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே காவல் சார்பு ஆய்வாளர் விஜயன் மற்றும் ரயில்வே போலீசார் விரைந்து சென்று தற்கொலை செய்துகொள்வதற்காக தண்டவாளத்தின் நடுவே அமர்ந்திருந்த பெண்ணை மீட்டு அவரிடம் விசாரித்த போது, அவர் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் அவரது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்கொலை செய்துகொள் வந்துள்ளதாகவும் அவருக்கு 12 வயதில் மகன் இருப்பதும் தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து ரயில்வே போலீசார் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து அவர்களை வரவழைத்து கணவன்- மனைவி இருவரையும் சமாதானப்படுத்தி எப்போதும் இனி தற்கொலை முடிவு எடுக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி கவுன்சிலிங் செய்துவைத்து அந்த பெண்ணை அனுப்பி வைத்தனர்.
ரயில் தண்டவாளத்தின் நடுவே அமர்ந்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை மீட்டு வந்து ரயில்வே காவலர்களை குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள்பாராட்டினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.