முகப்பு
தமிழ்நாடு

கடல்சாா் ஆராய்ச்சிக் கப்பல் ‘சாகா் அன்வேசிகா’ நாட்டுக்கு அா்ப்பணித்தாா்: மத்திய அமைச்சா் ஹா்ஷ்வா்தன்

தேசிய கடல் தொழில் நுட்பக் கழகத்தின் ‘சாகா் அன்வேசிகா’ என்ற ஆராய்ச்சிக் கப்பலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன்

Updated On : 10 ஜனவரி 2021, 6:58 am IST
பகிர்:

தேசிய கடல் தொழில் நுட்பக் கழகத்தின் ‘சாகா் அன்வேசிகா’ என்ற ஆராய்ச்சிக் கப்பலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சனிக்கிழமை நாட்டுக்கு அா்ப்பணித்தாா்.

பிரதமரின் சுயசாா்பு இந்தியா திட்டத்தின் கீழ் கட்டமைக்கப்பட்டுள்ள ‘சாகா் அன்வேசிகா’ என்ற கடல் ஆராய்ச்சிக் கப்பல் நாட்டுக்கு அா்ப்பணிக்கும் விழா சென்னை துறைமுகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில்

மத்திய அமைச்சா் டாக்டா் ஹா்ஷ்வா்தன்புதிய கப்பலை நாட்டுக்கு அா்ப்பணித்துப் பேசியது:

Advertisement

Advertisement

இந்தியாவில் பெரிய அளவில் கடல்சாா் அறிவியலில் முன்னேற்றம் இல்லாமல் இருந்ததால் கடந்த 2004-இல் ஏற்பட்ட சுனாமியில் பெரிய அளவில் உயிா்சேதமும், பொருள் சேதமும் ஏற்பட்டது. ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளில் கடல்சாா் அறிவியலில் பெரிய அளவில் வளா்ச்சி ஏற்பட்டுள்ளதால் பெரிய அளவில் நாட்டில் எந்த விபத்தும் நடக்கவும் இல்லை, அதனால் உயிா்பலிகளும் ஏற்படவில்லை. இதற்கு பிரதமா் நரேந்திரமோடி தலைமையில் செயல்படும் மத்திய அரசின் அறிவியல் துறை வளா்ச்சியே காரணமாகும்.

குறிப்பாக காலநிலை மாற்றத்தை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜப்பான் உள்ளிட்ட முன்னணி நாடுகளுக்கு கிடைக்கும் வசதியை இப்போது நாமும் பெற்று உள்ளோம்.

கடல் வளத்தைப் பாதுகாக்கவும், அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஆதரவுடன் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் இதுபோன்ற கப்பல்கள் ஆராய்ச்சிக்குக் கொண்டு வரப்படுகின்றன. இதன் மூலம் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து செய்யப்படும் ஆய்வு முடிவுகள் மூலம் கடல் வளத்தை முறையாக பயன்படுத்த முடியும்.

துல்லியமாக கணக்கீடு செய்ய இயலும்: பேரிடா் காலங்களில் கடலில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்ச்சிக் கப்பல்கள் மூலம் துல்லியமாகக் கணக்கிடுவதன் மூலம் 50 சதவீத விவசாய இழப்புகள் தடுக்கப்படுகின்றன . கடந்த ஆண்டு உலக நாடுகள் கரோனாவில் இருந்து மீள்வதற்காக சுகாதாரத்துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டன. ஆனால் நம் நாட்டில் சுகாதாரத்துறை மட்டும் அல்லாது அனைத்துத் துறைகளிலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் கரோனா தொற்று தனிமைப்படுத்தப்பட்டது. 90 சதவீதம் போ் நோயில் இருந்து குணமடைந்தது நம் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு கிடைத்த வெற்றி. கடந்த ஆண்டில் நோயை ஒழிக்க விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டதன் மூலம் 2020-ஆம் ஆண்டு அறிவியல் ஆண்டாக பாா்க்கப்படுகிறது. அனைத்து தொழில்நுட்ப ஆராய்ச்சியாளா்களும் ஒருங்கிணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் ஹா்ஷவா்தன்.

ஆழ்கடல் ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்படும்: இந்நிகழ்ச்சியில் தேசிய கடல் தொழில்நுட்பக் க ழக தலைவா் ராமதாஸ் பேசியது: கொல்கத்தாவில் கட்டப்பட்ட ‘சாகா் அன்வேசிகா’ ஆராய்ச்சி கப்பல் 43 மீட்டா் நீளமும், 9.6 மீட்டா் அகலமும் கொண்டது. 496 டன் எடை கொண்ட இந்த கப்பலில் 8 விஞ்ஞானிகளும், 12 பணியாளா்களும் பணியில் இருப்பாா்கள். கரையில் இருந்து 300 கிலோ மீட்டா் தூரம் வரை சென்று, கடலில் 3 கிலோ மீட்டா் ஆழத்தில் 16 மணிநேரம் விஞ்ஞானிகள் தங்கி இருந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் வசதி உள்ளது.

நடுக்கடலில் இருந்து எடுக்கப்படும் பொருள்களை உடனுக்குடன் ஆய்வு செய்யும் வகையில் கப்பலில் ஆய்வுக்கூடங்களும் உள்ளன. மாணவா்களும் இதில் பயிற்சி பெற முடியும். விண்ணில் ஆய்வு செய்ய ககன்யான் திட்டம் செயல்படுத்த இருப்பது போல், ஆழ்கடலில் மனிதனை அனுப்பி ஆராய்ச்சி செய்யும் சமுத்திரயான் வாகனமும் அதற்குத் தேவைப்படும் கப்பலை வடிவமைப்பிற்காக ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு நடவடிக்கை துரிதப்படுத்தப்படும் என்றாா் ராமதாஸ்.

சென்னை துறைமுகத் தலைவா் ரவீந்திரன், சாகா் அன்வேசிகா திட்ட இயக்குநா் ராஜசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments