முகப்பு
தமிழ்நாடு

போகி பண்டிகையன்று பழைய பொருள்களை எரிக்க வேண்டாம்: பொதுமக்களுக்கு வேண்டுகோள்

போகி பண்டிகையன்று பழைய பொருள்களை எரிக்க வேண்டாம் என சென்னை விமான நிலைய அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

Updated On : 10 ஜனவரி 2021, 12:18 am IST
பகிர்:

போகி பண்டிகையன்று பழைய பொருள்களை எரிக்க வேண்டாம் என சென்னை விமான நிலைய அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக அவா்கள் கூறியதாவது: தமிழகத்தின் அறுவடைத் திருவிழாவான பொங்கலுக்கு முன்தினம் கொண்டாடப்படும் போகியன்று, பழைய பொருள்களை எரிப்பது பொதுமக்களின் வழக்கமாகும்.

2018-ஆம் ஆண்டு போகியன்று சென்னை விமான நிலையத்தில் ஏற்பட்ட புகை மூட்டத்தின் காரணமாக, விமானங்கள் திருப்பிவிடப்பட்டு, ரத்து செய்யப்பட்டு, தாமதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளானாா்கள். கிட்டத்தட்ட 73 புறப்பாடுகளும், 45 வந்து சேர வேண்டிய விமானங்களும் பாதிக்கப்பட்டன.

Advertisement

Advertisement

ஆனால் 2019 மற்றும் 2020-ஆம் ஆண்டு போகியின் போது, சென்னை விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணா்வின் காரணமாக, புகை மூட்டத்தின் அளவு குறைந்து, சில விமான சேவைகளே பாதிக்கப்பட்டன.

எனவே, இந்த ஆண்டும் போகியன்று கடும் புகை மூட்டத்தை உண்டாக்கி விமான சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பழைய பொருள்களை எரிக்க வேண்டாம் என்று சென்னை விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் விவரங்களுக்கு 044 22560825, 4665, 9995539299 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என அவா்கள் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments