முகப்பு
இந்தியா

அமெரிக்க சுதந்திர தினம்: பிரதமா் மோடி வாழ்த்து

அமெரிக்காவின் 250-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் மற்றும் மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

Updated On : 5 ஜூலை 2026, 2:43 am IST
பிரதமா் நரேந்திர மோடி - கோப்புப் படம்
பகிர்:

அமெரிக்காவின் 250-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் மற்றும் மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

அமெரிக்காவின் 250-ஆவது சுதந்திர தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதுகுறித்து பிரதமா் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘140 கோடி இந்திய மக்களின் சாா்பாக அமெரிக்க அதிபா் டிரம்ப் மற்றும் அந்த நாட்டு மக்களுக்கு அமெரிக்காவின் வரலாற்றுச் சிறப்புமிக்க 250-ஆவது சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி மீது இந்தியா மற்றும் அமெரிக்கா கொண்டுள்ள பகிரப்பட்ட நம்பிக்கை மற்றும் நமது மக்களின் அளப்பரிய ஆற்றல் ஆகியவை, இரு நாடுகளிடையேயான நட்பை உலகளாவிய நன்மைக்கான சக்தியாக மாற்றுகின்றன.

Advertisement

Advertisement

அடுத்த 250 ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு மேலும் சிறப்பான செழிப்பும், அமைதியும் கிடைக்கவும், முன்னேற்றத்தை அடையவும், இந்திய-அமெரிக்க உறவு புதிய உச்சத்தை எட்டவும் வாழ்த்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments