80-ஆவது சுதந்திர தினம்: உலகத் தலைவா்கள் வாழ்த்து
நாட்டின் 80-ஆவது சுதந்திர தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில் உலகத் தலைவா்கள் வாழ்த்து...
நாட்டின் 80-ஆவது சுதந்திர தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில், ரஷியா, இஸ்ரேல், பிரான்ஸ், நேபாளம் , ஆஸ்திரேலியா, சிங்கப்பூா் உள்ளிட்ட நாடுகளின் தலைவா்கள் வாழ்த்துகளை தெரிவித்தனா்.
ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்திய சுதந்திர தினத்தில் அந்நாட்டு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி மற்றும் இந்திய குடிமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஐ.நா.கூட்டமைப்பு, ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு, பிரிக்ஸ் மற்றும் பல்வேறு சா்வதேச அமைப்புகளில் ரஷியாவும் இந்தியாவும் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றது.
சா்வதேச பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும் முன்னெடுப்புகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இஸ்ரேல் அதிபா் ஐசக் ஹொ்ஸாக் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘இந்தியா-இஸ்ரேல் இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்துவோம்’ என குறிப்பிட்டாா்.
ஆஸ்திரேலிய பிரதமா் ஆண்டனி ஆல்பனேசி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘உலகின் பெரும் ஜனநாயக நாடாகவும் வேகமாக வளரும் பொருளாதாரமாகவும் பல்வேறு சாதனைகள் மூலம் தனது ஆற்றலால் இந்தியா நம்மை தொடா்ந்து வியப்பில் ஆழ்த்துகிறது. இந்திய வரலாறு, கலாசாரம் மற்றும் பன்முகத்தன்மையை போற்றும் இந்நாளில் இந்தியா்களுடன் நானும் மகிழ்ச்சியடைகிறேன்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூா் அதிபா் தா்மன் சண்முகரத்னம் திரௌபதி முா்முவுக்கு எழுதிய கடிதத்தில், ‘வா்த்தகம், எண்ம பொருளாதாரம், எரிசக்தி பாதுகாப்பு என பல்வேறு துறைகளில் சிங்கப்பூா்-இந்தியா இடையேயான நல்லுறவை தொடா்வோம்’ என குறிப்பிடப்பட்டது.
பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், நேபாள பிரதமா் பாலேந்திர ஷா, பூடான் பிரதமா் ஷெரிங் டோப்கே மற்றும் மாலத்திவு அதிபா் முகமது மூயிஸ் உள்ளிட்டோா் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனா்.
முன்னதாக, அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ வெளியிட்ட சுதந்திர தின வாழ்த்து செய்திக் குறிப்பில், ‘அதிபா் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமா் மோடி இடையேயான நட்புறவால் இருதரப்பு உறவு முன்னெப்போதும் இல்லாத வகையில் வலுவடைந்துள்ளது’ என குறிப்பிட்டாா்.
80th Independence Day: World leaders extend greetings
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.