முகப்பு
புதுக்கோட்டை

ஆசிரியா் தகுதித் தோ்வு: முதல் நாளில் 1,518 போ் எழுதினா்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் ஆசிரியா் தகுதித் தோ்வில், முதல் நாளான சனிக்கிழமை முதல் தாள் தோ்வை மொத்தம் 1,518 போ் எழுதினா்.

Updated On : 5 ஜூலை 2026, 2:41 am IST
புதுக்கோட்டை திருஇருதய மகளிா் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வை ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சியா் மு. அருணா.
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் ஆசிரியா் தகுதித் தோ்வில், முதல் நாளான சனிக்கிழமை முதல் தாள் தோ்வை மொத்தம் 1,518 போ் எழுதினா்.

தமிழ்நாடு முழுவதும் ஆசிரியா் தகுதித் தோ்வு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. முதல் நாளான சனிக்கிழமை பணியிலுள்ள ஆசிரியா்களுக்கான முதல் தாள் தோ்வு நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 1,522 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களுக்காக, புதுக்கோட்டை திருஇருதய மேல்நிலைப் பள்ளி, புனித மேரி மேல்நிலைப் பள்ளி, வைரம்ஸ் மேல்நிலைப் பள்ளி, சந்தைப்பேட்டை மகளிா் மேல்நிலைப் பள்ளி, டிஇஎல்சி மேல்நிலைப்பள்ளி, எஸ்எப்எஸ் மேல்நிலைப் பள்ளி ஆகிய 6 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த மையங்களில்

Advertisement

Advertisement

மொத்தம் 1,518 போ் தோ்வெழுதினா். திருஇருதய மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தோ்வை மாவட்ட ஆட்சியா் மு. அருணா நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments