வேதாரண்யம் மீனவர்கள் நால்வர் கரை திரும்பினர்
நாகை மாவட்டம், வேதாரண்யத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் இன்று கரை திரும்பியுள்ளனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்திலிருந்து கடலுக்குள் சென்று சூறைக் காற்றுக்குள் சிக்கி அவதியுற்றுக் கரை திரும்புவது தாமதமானதால் தேடப்பட்டு வந்த மீனவர்கள் நால்வர் இன்று (ஜன.12) பகல் கரை திரும்பினர்.
ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயக்குமார், ஜெயமூர்த்தி, பவித்திரன், நவீன் ஆகியோர். மீனவர்களான இவர்கள் நால்வரும் கண்ணாடி இழைப்படகு ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை கடலுக்குள் சென்றுள்ளனர்.
திங்கள்கிழமை கரை திரும்ப வேண்டிய இவர்கள், திங்கள்கிழமை ஏற்பட்ட கனமழை, சூறைக்காற்றில் சிக்கி கடலுக்குள் அவதியுற்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் நால்வரும் தேடப்பட்டு வந்தனர். இந்த நிலையில், மீனவர்கள் நால்வரும் செவ்வாய்க்கிழமை பகலில் பத்திரமாகப் படகுடன் கரை சேர்ந்தனர்.
Advertisement
Advertisement
ஆறுகாட்டுத்துறைக்கு கரை திரும்பி மீனவர்களுடன் மீன்வளத்துறையினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.