வாலாஜாபேட்டையில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி
வாலாஜாபேட்டையில் மாநில அளவிலான சிலம்பப் போட்டியை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர்.கிளாஸ்டன் புஷ்பராஜ் துவக்கி வைத்தார்.
வாலாஜாபேட்டையில் மாநில அளவிலான சிலம்பப் போட்டியை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர்.கிளாஸ்டன் புஷ்பராஜ் துவக்கி வைத்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்தில் வாலாஜாபேட்டை சில்க் சிட்டி, அரவிந்தன் சிலம்பம் தேசிய பயிற்சி பள்ளி மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இணைந்து தமிழர் திருநாளாம் பொங்கல் விழா முன்னிட்டு பாரம்பரிய கலையான சிலம்பத்தை வளர்க்கும் வகையில் மாநில அளவில் சிலம்பம் போட்டி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியினை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ் கலந்துகொண்டு போட்டியில் துவக்கி வைத்தார். இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் 200க்கும் மேற்பட்ட சிலம்ப விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.