முகப்பு
தமிழ்நாடு

ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடியில் கனமழைக்கு வாய்ப்பு

ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 14 ஜனவரி 2021, 1:37 pm IST
ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடியில் கனமழைக்கு வாய்ப்பு (கோப்புப்படம்)
பகிர்:

ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் மேலடுக்கு சுழற்சி  காணப்படுகிறது.

இதனால், அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Advertisement

Advertisement

மேலும் அடுத்த மூன்று நாள்களுக்கு தென் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும்.  சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments