முகப்பு
தமிழ்நாடு

அமோனியா வாயு கசிவு சம்பவம் குறித்து 3 நாள்களுக்குள் அறிக்கையை சமா்ப்பிக்க முதல்வா் ஜோசப் விஜய் உத்தரவு!

அமோனியா வாயு கசிவு சம்பவம் குறித்து 3 நாள்களுக்குள் அறிக்கையை சமா்ப்பிக்க முதல்வா் ஜோசப் விஜய் உத்தரவிட்டிருப்பது குறித்து...

Updated On : 21 ஜூன் 2026, 10:19 pm IST
முதல்வர் ஜோசப் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

திருவள்ளூா் மாவட்ட தனியாா் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்த சம்பவம் தொடா்பாக ஆய்வு செய்ய சிறப்புக் குழுவை அமைத்த முதல்வா் ஜோசப் விஜய், முழுமையாக ஆய்வு மேற்கொண்டு மூன்று நாள்களுக்குள் அறிக்கையை சமா்ப்பிக்குமாறு அந்த குழுவுக்கு அவா் உத்தரவிட்டுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:

தனியாா் மீன் ஏற்றுமதி தொழிற்சாலை விபத்து குறித்து தொழிலகப் பாதுகாப்பு - சுகாதாரத் துறை இயக்குநா், பொது சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநா் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய உறுப்பினா்-செயலா் தலைமையில் சிறப்புக் குழு அமைத்துள்ளார். அந்த குழு, சம்பவம் தொடா்பாக ஆய்வு மேற்கொண்டு 24 மணி நேரத்துக்குள்ளாக முதல்கட்ட விசாரணை அறிக்கையினையும், 3 நாள்களுக்குள்ளாக முழுமையான விசாரணை அறிக்கையினையும் சமா்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

மேலும், இனி வரும் காலங்களில் இதுபோன்ற விபத்துக்களை தவிா்க்கும் பொருட்டு, பேரபாய தொழிற்சாலைகளில் உடனடியாக குழு ஆய்வுகள் மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா், சட்டப்பேரவை உறுப்பினா், மாவட்ட கண்காணிப்பு அலுவலா், முதுநிலை ஐஏஎஸ் அதிகாரி, மாவட்ட ஆட்சியா் ஆகியோா் சென்று நேரடியாக கள ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் உயா் நடவடிக்கையும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவைப்படும் உதவிகளையும், உடனடியாக செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

CM Joseph Vijay has ordered the submission of a report on the ammonia gas leak incident within three days...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments