முகப்பு
தமிழ்நாடு

திருப்பூரில் சாலையை சீரமைக்கக் கோரி தேங்கிய மழைநீரில் கப்பல் விடும் போராட்டம் 

திருப்பூர் ஸ்ரீ பாலாஜி நகரில் சாலையை சீரமைக்கக்கோரி தேங்கிய மழைநீரில் அப்பகுதி பொதுமக்கள் கப்பல் விடும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர். 

Updated On : 15 ஜனவரி, 2021 at 3:48 PM
திருப்பூரில் சாலையை சீரமைக்கக் கோரி தேங்கிய மழைநீரில் கப்பல் விடும் போராட்டம்
பகிர்:

திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீ பாலாஜி நகரில் சாலையை சீரமைக்கக்கோரி தேங்கிய மழைநீரில் அப்பகுதி பொதுமக்கள் கப்பல் விடும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர். 

திருப்பூர் மாநகராட்சி, 36-வது வார்டு, முத்தணம்பாளையம், அருகே உள்ள ஸ்ரீ பாலாஜி நகர், குருவாயூரப்பன் நகர், கோடீஸ்வரன் நகர் உள்ளிட்ட பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தப்பகுதிக்கு மாநகராட்சியால் இதுவரை அடிப்படை வசதிகளான தார் சாலை, தெரு விளக்கு, குப்பைத் தொட்டி, பொது குடிநீர் குழாய், அமைக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி உள்ளிட்ட அலுவலக அதிகாரிகளிடம் கோரிக்கை குறித்து மனு அளித்தும் இது வரை எந்த ஒரு நடவடிகையும் எடுக்கவில்லை.

இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை மிகவும் மோசமாக உள்ளதை கண்டித்து சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரில் காகித கப்பல் விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Advertisement

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-  எங்கள் பகுதி முத்தணம்பாளையம் ஊராட்சியாக இருந்து வந்தது. அதன் பிறகு மாநகராட்சி வார்டுகள் விரிவாக்கம் செய்யப்பட்டு திருப்பூர் மாநகராட்சியுடன் இணைத்து 36-வது வார்டாக மாற்றப்பட்டு இருந்து வருகிறது. ஸ்ரீ பாலாஜி நகர், கோடிஸ்வரன் நகர்,குருவாயூரப்பன் நகர், உள்ளிட்ட பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இது வரை எங்கள் பகுதி மாநகராட்சியால் அங்கீகரிக்கப்படாத பகுதியாகவே இருந்து வருகிறது. இதனால் எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளான தார்சாலை, தெரு விளக்கு, சாக்கடை வசதி, குப்பை தொட்டி, பொது குடிநீர் குழாய் உள்ளட்ட வசதிகள் செய்து தர மறுத்து வருகின்றனர். என எங்கள் பகுதியை அங்கீகரிக்கப்பட்ட பகுதியாக மாற்றி அடிப்படை வசதிகள் செய்துதர கோரியும், மேலும் நீண்ட நாட்களாக எங்கள் பகுதி சாலை மிகவும் மோசமான நிலையில் சேரும், சகதியுமாக உள்ளதால் நடந்தும், வாகனத்தில் செல்லமுடியாத நிலையில் உள்ளது. அதனை  அதிகாரிகள் கவனத்தை ஈர்க்க சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரில் கப்பல் விடும் போராட்டத்தில் ஈடுபட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.