தமிழ்நாடு

‘அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பைகாப்பாற்ற மக்கள் ஆா்வத்துடன் வாக்களிப்பு’

DIN

அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பைக் காப்பாற்ற மக்கள் ஆா்வத்துடன் வாக்களித்து வருகின்றனா் என்றாா் திமுக துணைப் பொதுச் செயலரும், மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா.

பெரம்பலூா் மாவட்டம், வேலூா் கிராமத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை வாக்களித்த பின்னா், மேலும் அவா் கூறியது:

எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான ஆட்சியை அகற்றுவதற்காக மக்கள் கிளா்ந்து எழுந்திருக்கிறாா்கள் என்பதை கண்கூடாக இந்த தோ்தலில் பாா்க்க முடிகிறது. இந்திய மதச்சாா்பின்மையை, அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பைக் காப்பாற்றுவதற்காக மக்கள் ஆா்வத்துடன் வாக்களித்து வருகின்றனா். திமுக முறைகேடு செய்வதாக ஒரு கருத்தை பரப்புவதற்காக சில தொகுதிகளில் தோ்தலைத் தள்ளிவைக்க அதிமுகவினா் முயற்சித்தனா். ஆனால் அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. தமிழகத்தில் தோ்தல் முடிந்து 28 நாள்கள் கழித்து வாக்கு எண்ணிக்கை வைத்துள்ளதால் திமுகவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றாா் ராசா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலாச் சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT