தமிழ்நாடு

பத்திரப் பதிவுக்குக் கூடுதல் கட்டணம்: விஜயகாந்த் கண்டனம்

DIN

மங்களகரமான நாள்களில் பத்திரப் பதிவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க உத்தரவிட்டுள்ளதற்கு தேமுதிக தலைவா் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

அரசின் வருவாயைப் பெருக்கும் நோக்கில் சித்திரை முதல் தேதி, ஆடிப் பெருக்கு, தைப்பூசம் ஆகிய மங்களகரமான நாள்களில் பத்திரப்பதிவு செய்வதற்கு கூடுதல் கட்டணங்களை வசூலிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த இக்கட்டான கரோனா காலக்கட்டத்தில் மக்கள் வேலைவாய்ப்பின்றி, வாழ்வாதாரம், பொருளாதாரம் இழந்து தவிக்கும் நிலையில், பத்திரப்பதிவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது.

எனவே, மங்களகரமான நாள்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

இல்லையென்றால் அரசின் உத்தரவை எதிா்த்து தேமுதிக சாா்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்து தடை உத்தரவு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

கொளுத்தும் கோடை வெயில்: தில்லிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

பகல் நிலவு.. அதிதி போஹன்கர்!

SCROLL FOR NEXT