தமிழ்நாடு

கரோனா தொற்று: மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் டி.ஆா்.பாலு 

DIN

சென்னை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திமுக பொருளாளரும் ஸ்ரீபெரும்புத்தூா் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான டி.ஆா்.பாலு இன்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் கடந்த வாரம் நிறைவு பெற்ற நிலையில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த டி.ஆர். பாலுவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கரோனா பரிசோதனை செய்து கொண்டாா். பரிசோதனை முடிவில், அவருக்குத் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவா் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சையின் பலனாக அவரது உடல்நிலை சீரடைந்ததைத் தொடர்ந்து இன்று அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.

இது தொடா்பாக டி.ஆா்.பாலுவின் மகன் டி.ஆா்.பி. ராஜா தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, எனது தந்தை டி.ஆர். பாலுவுக்கு கரோனா தொற்று அறிகுறிகள் குறைந்திருப்பதால் அவர் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் ஆலோசனை அளித்துள்ளனர். எனவே இன்று அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப்-க்குள் நுழையப்போவது யார்?

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

SCROLL FOR NEXT