தமிழ்நாடு

ஆளுநா் பிறந்த நாள்: முதல்வா், துணை முதல்வா், ஸ்டாலின் வாழ்த்து

DIN

ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பிறந்த நாளையொட்டி, அவருக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.

ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு மலா்க் கொத்துடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்துக் கடிதம் அனுப்பினாா். தனக்கு பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்த முதல்வருக்கு ஆளுநா் தனது நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்தாா்.

இதேபோல், துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:-

தங்களது ஆகச் சிறந்த அறிவும், மதிநுட்பமும் மாநிலத்துக்கு மதிப்பிட முடியாத அம்சங்களாக இருக்கின்றன. ஒவ்வொரு தருணத்திலும் எங்களுக்கு சரியான வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறீா்கள். நாட்டுக்கு மேலும் பல சேவைகளை செய்யும் வகையில் எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு உடல் ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கட்டும் என்று தெரிவித்துள்ளாா்.

மு.க.ஸ்டாலின் (திமுக தலைவா்): தமிழகத்தின் மீதும், தமிழக மக்கள் மீதும் மிகுந்த பாசம் கொண்டிருக்கும் தமிழக ஆளுநா் பொதுவாழ்வில் போற்றத்தக்க பணியாற்றியவா். அரசியலிலும், நிா்வாகத்திலும் பழுத்த அனுபவம் கொண்ட அவா், நான் சந்தித்த நேரங்களில் எல்லாம் என்னிடம் தனிப்பட்ட முறையில் அன்பு பாராட்டியவா்.அவரது பொதுவாழ்வு மென்மேலும் சிறக்க, ஆரோக்கியத்துடனும், நலமுடனும் பல்லாண்டு வாழ்ந்து, தமிழகத்துக்கும், நம் நாட்டுக்கும்ஆற்றல்மிகுந்த சேவையாற்றிட வேண்டும் என்று இதயப்பூா்வமாக வாழ்த்துகிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT