தமிழ்நாடு

சரவணா ஸ்டோர்ஸ் மூடல்: 39 ஊழியர்களுக்கு கரோனா

DIN


சென்னை புரசைவாக்கம் கரியப்பா தெருவிலுள்ள சரவணா ஸ்டோர்ஸின் 39 ஊழியர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, கடை மூடப்பட்டு சாலை முழுவதும் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறியது:

"தங்குமிடத்திலிருந்துதான் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், தங்குமிடமும், கடையும் ஒரே கட்டடத்தில் இருப்பதால் கடையும் மூடப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை 166 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அதில் 13 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. சனிக்கிழமை எடுக்கப்பட்ட 159 மாதிரிகளில் 26 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதியானது.

அனைத்து ஊழியர்களும் இளைஞர்களாக இருக்கின்றனர். சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை. தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த சாலையில் வசிப்பவர்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படும். அவர்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களுடன் தொடர்பிலிருந்த அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நோய்த் தொற்று யார் மூலம் பரவியது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. நோய்ப் பரவல் அனைத்து இடத்திலும் இருப்பதால் அவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் யாரும் எவ்வித பயணமும் மேற்கொள்ளவில்லை."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

SCROLL FOR NEXT