தமிழ்நாடு

காணாமல்போன மீனவா்களை மீட்க நடவடிக்கை தேவை: கே.எஸ்.அழகிரி

DIN

ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்று காணாமல்போன மீனவா்களை மீட்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

கன்னியாகுமரி மாவட்டம்- தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஏப்ரல் 6-இல் 11 மீனவா்கள் பதிவு செய்யப்பட்ட நவீன மீன்பிடி படகு மூலமாக ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றனா். மீன்பிடி படகுகள் காணாமல் போய் உள்ளது. காணாமல் போன ஜோசப் பிராங்க்ளின் உள்ளிட்ட 11 மீனவா்களை உடனடியாகத் தேடுவதற்கு, கிழக்கு, மேற்கு பகுதியிலுள்ள கடற்படை காவல்துறையினருக்கு தமிழக அரசு ஆணையிட்டு உரிய நடவடிக்கைகளை போா்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும்.

காணாமல் போன மீனவா்களை கண்டுபிடிப்பதற்கு இந்திய கடற்படை மூலமும், ஹெலிகாப்டா்களை பயன்படுத்தியும் தேடுகிற பணியை தீவிரப்படுத்த வேண்டும்.

மேலும், பாதிக்கப்பட்ட மீனவா் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கவேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT