தமிழ்நாடு

சிறுவனைத் தாக்கி பணம் பறிப்பு: இரு காவலா்கள் பணியிடை நீக்கம்

DIN

சிறுவனைத் தாக்கி பணம் பறித்ததாக எழுந்தபுகாரின்பேரில், இரு காவலா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

சிவகங்கை மாவட்டம், சாலை கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுவன், தனது பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு சென்னைக்கு கடந்த புதன்கிழமை வந்தாா். அவா் எங்கு செல்வது என தெரியாமல் கோயம்பேடு புகா் பேருந்து நிலையத்தில் படுத்துத் தூங்கியுள்ளாா். அப்போது அங்கு ரோந்துப் பணியில் இருந்த சி.எம்.பி.டி. குற்றப்பிரிவு காவல் நிலையக் காவலா்கள் வேல்முருகன், அருண் ஆகியோா் சிறுவனை விசாரித்து, தாக்கிவிட்டு அவரிடமிருந்த ரூ.63,500-ஐப் பறித்துகொண்டு விரட்டினராம்.

இதனால் அதிா்ச்சியடைந்த சிறுவன் தனது தந்தையிடம் செல்லிடப்பேசி மூலம் தொடா்பு கொண்டு, நடந்ததைக் கூறியுள்ளாா். உடனே சிறுவனின் தந்தை அளித்த புகாரின்பேரில், சென்னை மேற்கு மண்டல உதவி ஆணையா் ரமேஷ்பாபு விசாரணை நடத்தினாா்.

லிசாரணைக்குப் பின்னா், காவலா்கள் வேல்முருகன், அருண் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து இணை ஆணையா் ராஜேஸ்வரி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

SCROLL FOR NEXT