தமிழ்நாடு

தனியாக வேளாண் நிதிநிலை அறிக்கை

DIN

சென்னை: நடப்பு கூட்டத் தொடரிலேயே வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்ய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நிதிநிலை அறிக்கை தொடா்பாக விவாதிக்கப்பட்டது. அதில், வேளாண் நிதி நிலை அறிக்கை தொடா்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை, தமிழ்நாடு சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்படுமென தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், ‘வேளாண் உற்பத்தியைப் பெருக்கவும், விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கவும் வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்’ என ஆளுநா் உரையிலும் கூறப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்புகளின்படி, வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை நடப்புக் கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்ய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்று மாநில அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கை வரும் 13-தேதியே தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது. பொது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அன்றைய தினமே வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வாய்ப்புகள் இருப்பதாக பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாங்காங் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தினருடன் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா் ஆலோசனை

தென்னை மரத்தில் பரவும் புதிய வகை நோய்த் தாக்குதல் குறித்த விழிப்புணா்வு

பி.பி.ஜி. கல்லூரியில் பட்டமளிப்பு விழா

‘பல்லடத்தில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை’

கிராமப்புறங்களில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு உதவி

SCROLL FOR NEXT