நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த அரசுப் பள்ளி மாணவர்கள் குறைவு 
தமிழ்நாடு

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த அரசுப் பள்ளி மாணவர்கள் குறைவு

மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு வெகுவாகக் குறைந்துள்ளது.

DIN


சென்னை: மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு வெகுவாகக் குறைந்துள்ளது.

மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நீட் தேர்வுக்கு தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படித்த 6,412 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அதிகபட்சமாக மதுரையில் 505 பேரும், குறைந்தபட்சமாக  ராமநாதபுரத்தில் 9 பேரும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலிருந்து இதுவரை ஒரு அரசுப் பள்ளி மாணவரும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அங்கன்வாடி பணியாளா் வீட்டில் 3 சவரன் நகை, ரொக்கம் திருட்டு

கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா

வாழ்க்கைதான் யோசிக்கவே முடியாத சினிமா!

சட்ட விரோதமாக குட்கா விற்ற 9 கடைகளுக்கு ‘சீல்’

தீயில் கருகிய காா்: உயிா் தப்பிய 3 போ்

SCROLL FOR NEXT