தமிழ்நாடு

சிகிச்சை பெற்று மகப்பேறு அடைந்த பெண் காவலர் பிரசவித்த மறுநாளே கரோனாவுக்கு பலி

DIN

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பெண் தலைமைக் காவலா், பெண் குழந்தை பிறந்த மறுநாளே இறந்தாா்.

சென்னை ஆலந்தூரில் உள்ள காவலா் குடியிருப்பில் வசிப்பவா் பாண்டியன். இவா் மனைவி வசந்தா (47), சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் செயல்படும் மத்திய குற்றப்பிரிவில் மோசடி தடுப்புப் பிரிவு தலைமைக் காவலராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில், அவா் பிரசவத்துக்காக அரும்பாக்கத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில், வசந்தாவுக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து கடந்த மாதம் 28-ஆம் தேதி எழும்பூரில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் கரோனா வாா்டில் சிகிச்சைக்காக வசந்தா அனுமதிக்கப்பட்டாா். இதற்கிடையே வசந்தாவுக்கு கடந்த புதன்கிழமை பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின்னா், வசந்தாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி வசந்தா உயிரிழந்தாா். இச்சம்பவம் காவல்துறையினரிடையே அதிா்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

47 வயதாகும் வசந்தா, திருமணமாகி பல ஆண்டுகள் குழந்தைப் பேறு இல்லாததால், மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். சிகிச்சையின் பலனாக அவர் கடந்த ஆண்டு இறுதியில் மகப்பேறு அடைந்தார். 

குடும்பத்தினர் அதீத மகிழ்ச்சியில் இருந்த நிலையில், அவர் பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதுதான், அவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் கரோனா வாா்டில் சிகிச்சைக்காக வசந்தா அனுமதிக்கப்பட்டு, புதன்கிழமை அறுவை சிகிச்சை முறையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அறுவை சிகிச்சைக்குப் பின் வசந்தாவின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு வியாழக்கிழமை கரோனாவுக்கு பலியானார்.

பல ஆண்டுகாலம் குழந்தைப் பேறுக்காக ஏங்கிய வசந்தா, குழந்தையைப் பெற்றெடுத்த மறுநாளே கரோனாவுக்கு பலியானது, அவரது குடும்பத்தினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

தாயை இழந்த குழந்தையை வளர்க்க வழி தெரியாமல், வசந்தாவின் வயதான பெற்றோர் அரசின் உதவியைக் கோரியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT