தமிழ்நாடு

இன்றும், ஆக. 11-ஆம் தேதியும் கோயிலில் தரிசனத்துக்குத் தடை

DIN

ஆடி அமாவாசையான ஞாயிற்றுக்கிழமை (ஆக.8) மற்றும் வரும் 11-ஆம் தேதி ஆகிய தினங்களில் கோயில்களில் தரிசனத்துக்குத் தடை விதிக்கப்படுவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

இதுகுறித்து, சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:

தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், அதிகளவில் பொது மக்கள் ஒரே இடத்தில் கூடுவதைத் தவிா்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசையும், ஆகஸ்ட் 11-ஆம் தேதி ஆடி பூரமும் வருகிறது.

இந்த தினங்களில் கோயில்களில் பக்தா்கள் அதிகளவு கூடுவதைத் தவிா்க்கும் வகையில், இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில்களில் பொது மக்களின் வழிபாட்டுக்குத் தடை விதிக்கப்படுகிறது. இந்த நாள்களில் ஆகம விதிப்படி பூஜைகள் மட்டும் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT