சீர்காழியில் கருணாநிதி நினைவு நாள் 
தமிழ்நாடு

சீர்காழியில் கருணாநிதி நினைவு நாள்

சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் நகர திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாள் விழா நடைபெற்றது. 

DIN

சீர்காழி: சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் நகர திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாள் விழா நடைபெற்றது. 

நகர செயலாளர் தம்பி. சுப்பராயன்  தலைமை வகித்தார். மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் பிரபாகரன், நகர துணை செயலாளர் பாஸ்கரன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் காழி. கலைவாணன் , மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராமச்சந்திரன்,  முன்னாள் நகர செயலாளர் பொன்முடி, கலை இலக்கிய பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் செல்வமுத்துக்குமார், மாணவரணி துணை அமைப்பாளர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் கலந்துகொண்டு கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு  மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். 

இதில் நகர நிர்வாகிகள் பந்தல். முத்து, கோடங்குடி.சங்கர், குகன், இளையராஜா, திருச்செல்வம், அமுல்ராஜ், ஆனந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

இதேபோல் சீர்காழி தென்பாதி உள்ள திமுக ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவுநாளுக்கு மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் பிரபாகரன் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் தியாக. விஜயேஸ்வரன், மாவட்ட பிரதிநிதி அன்பழகன், ஒன்றிய கவுன்சிலர் பஞ்சு.குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் இராம .இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், கலந்து கொண்டு கருணாநிதி உருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். ஒன்றிய வர்த்தக அணி துணை அமைப்பாளர் கல்யாணகுமார், ஊராட்சி மன்றத்தலைவர் தம்பி. சுப்ரவேல் முன்னாள் ஊராட்சி தலைவர் சங்கரபாண்டியன் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலரும் தீயும் வடகிழக்கு இந்தியப் பயணம்

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

SCROLL FOR NEXT