எம்எல்ஏ விடுதியில் எஸ்.பி. வேலுமணியிடம் விசாரணை 
தமிழ்நாடு

எம்எல்ஏ விடுதியில் எஸ்.பி. வேலுமணியிடம் விசாரணை

சென்னையில் உள்ள எம்எல்ஏ விடுதியில் தங்கியிருக்கும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

DIN


சென்னை: சென்னையில் உள்ள எம்எல்ஏ விடுதியில் தங்கியிருக்கும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் கோவை வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ள நிலையில், இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கோவை குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி. வேலுமணியின் வீடு உள்பட அவருக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னை கோடம்பாக்கத்தில் வேலுமணிக்கு நெருக்கமானவர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக ஆட்சியில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்தப்புள்ளி ஒதுக்கீட்டில் மிகப்பெரிய முறைகேடு நடந்து உள்ளதாகக் கூறி அப்போதைய உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. 

இதனையடுத்து, எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து விசாரித்து வரும் லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர், இன்று அவரது வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மெல்லிசையே.. கௌரி கிஷன்!

SCROLL FOR NEXT