கோப்புப்படம் 
தமிழ்நாடு

பொது விநியோக திட்டத்தில் மின்னணு கொள்முதல் முறை அறிமுகம் - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

பொது விநியோக திட்டத்தில் மின்னணு கொள்முதல் முறை அறிமுகப்படுத்தப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

DIN

பொது விநியோக திட்டத்தில் மின்னணு கொள்முதல் முறை அறிமுகப்படுத்தப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் இன்று, 2021-22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

அப்போது, பொது விநியோக திட்டத்தில் மின்னணு கொள்முதல் முறை அறிமுகப்படுத்தப்படும் என பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறுத்து அவர் மேலும் கூறுகையில், "பெட்ரோல், டீசல் பயனாளர்களுக்கு நியாயமான நிவாரணம் வழங்கும் பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 4,57,645 மனுக்கள் பெறப்பட்டு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன" என்றார்.

முக்கிய அறிவுப்புகள் பின்வருமாறு:

1921ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற சட்டமன்றம் நிகழ்வுகள் கணினிமயமாக்கப்படும். 

அனைத்து துறைகளிலும் தமிழ் ஆட்சி மொழியாக்கப்படும். 

தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறையில் மேற்கொள்ள 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழ்நாட்டின் நிதி நிலை மூன்றாண்டுகளில் சரி செய்யப்படும். 

புகழ்பெற்ற வல்லுநர்கள் கொண்ட ஆலோசனை குழு அமைக்கப்படும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அந்நிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

மகளிர் உலகக் கோப்பைக்கான ஐசிசி அணியில் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா, தீப்திக்கு இடம்!

ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் ராஜிநாமா!

சிறப்பு தீவிர திருத்தம்: ஆரம்ப நிலையிலேயே தோல்வி - இந்திய கம்யூ.,

SCROLL FOR NEXT