முகப்பு
தமிழ்நாடு

வேளாண் சட்டங்களுக்கு எதிராக பேரவையில் தீர்மானம்: அதிமுக, பாஜக வெளிநடப்பு

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பேரவையில் திமுக அரசு கொண்டு வந்துள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:


சென்னை: மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பேரவையில் திமுக அரசு கொண்டு வந்துள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்தார்.

அரசின் இந்த தீர்மானத்து எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இவர்களைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்களும்  தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், வேளாண் மக்கள் வாழ்வு மேம்படைய வேண்டும் என்பதற்காக மத்திய அரசு புதிய 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இதனை மாநில அரசு உள்நோக்கத்தோடு எதிப்பு தெரிவித்து, அதற்கான தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. எனவே அந்த தீர்மானத்தை எதிர்த்து நாங்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.