தமிழ்நாடு

அகதிகள் முகாமை மறுவாழ்வு முகாம் என பெயர் மாற்றம்: அரசாணை வெளியீடு

DIN

இலங்கைத் தமிழா் அகதிகள் முகாம் என்பது இனி இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்கள் என அழைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

வேளாண்மை, கால்நடை, மீன்-பால் வளத் துறைகள் மானியக் கோரிக்கை மீது சனிக்கிழமை நடைபெற்ற விவாதத்தின் போது முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசுகையில், இலங்கை அகதிகள் முகாம் இனி, இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும். ஏனென்றால் அவா்கள் ஆதரவற்றவா்கள் அல்ல. நாம் அவா்களுக்குத் துணையாக இருக்கிறோம். அந்த உணா்வுடன் அகதிகள் முகாம் என்று அழைக்காமல் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் என்று அழைக்க அரசு ஆணையிட்டுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

இந்நிலையில், இலங்கை தமிழர் அகதிகள் முகாம், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்கள் என அழைப்பதற்கான பெயர் மாற்றத்திற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் பழுதடைந்துள்ள 7469 வீடுகளை கட்டித்தரவும், குடிநீர் வசதி மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

ஆண்டுதோறும் வாழ்க்கை தரம் மேம்பாடு நிதியாக ரூ.5 கோடி,  300 சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி மற்றும் சமுதாய முதலீட்டு நிதியாக ரூ.6.16 கோடி, விலையில்லா எரிவாயு இணைப்பு மற்றும் எரிவாயு உருளை மானியத்திற்காக ரூ.10.50 கோடி ஒதுக்கீடு, கல்வி உதவித் தொகை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, குடிநீர் வசதி, சாலை வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட  அடிப்படை வசதிகள் என ரூ. 317 கோடிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT