சுதந்திர போராட்ட வீரர் ஸ்ரீ நீலகண்ட பிரம்மச்சாரி பிறந்தநாள் விழா 
தமிழ்நாடு

சுதந்திர போராட்ட வீரர் ஸ்ரீ நீலகண்ட பிரம்மச்சாரி பிறந்தநாள் விழா

மயிலாடுதுறை மாவட்டம்  சீர்காழியை அடுத்துள்ள எருக்கூர் அக்ரஹாரத்தில் சுதந்திரப் போராட்டத் தியாகி நீலகண்ட பிரம்மச்சாரியின் 132 ஆவது பிறந்த நாள் விழா அவர் பிறந்து வாழ்ந்த அவதார இல்லத்தில் நடைபெற்றது. 

DIN

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம்  சீர்காழியை அடுத்துள்ள எருக்கூர் அக்ரஹாரத்தில் சுதந்திரப் போராட்டத் தியாகி நீலகண்ட பிரம்மச்சாரியின் 132 ஆவது பிறந்த நாள் விழா அவர் பிறந்து வாழ்ந்த அவதார இல்லத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன், ஆர்.எஸ்.எஸ். மாநில நிர்வாகி மதிவாணன், சேவாபாரதி மாவட்டத் தலைவர் மும்மூர்த்தி, பாஜக கலை இலக்கிய அணியின் மாவட்டத் தலைவர் முருகேசன், கொள்ளிடம் ஒன்றிய பொதுச்செயலாளர் மனோஜ் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் ராஜாராமன், ராஜேந்திரன், சரவணன், சக்திவேல், துரைராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.

பாஜக அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு மாநில நிர்வாகி செல்வம் நன்றி கூறினார். நீலகண்ட பிரம்மச்சாரி அவர்களின் வாரிசு சுப்பிரமணியன் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்ததோடு அனைவரையும் வரவேற்றார்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படன. சீர்காழி ரயில் நிலையத்திற்கு நீலகண்ட பிரம்மச்சாரி  பெயரை வைக்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்துகிறது. ஸ்ரீ நீலகண்ட பிரம்மச்சாரி வாழ்க்கை வரலாறு மற்றும் சுதந்திர போராட்டம் தொடர்பான கருத்துகளை மையமாக வைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துவது, ஸ்ரீ நீலகண்ட பிரம்மச்சாரி  பயின்ற எருக்கூர் ஆரம்பப்பள்ளி, சீர்காழி சபாநாயகர் இந்து பள்ளி மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் அவரது திரு உருவப்படம் வைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலரும் தீயும் வடகிழக்கு இந்தியப் பயணம்

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

SCROLL FOR NEXT