தமிழ்நாடு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: வாக்காளா் பட்டியல் வெளியீடு

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

இது தொடா்பாக தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய தோ்தல் ஆணையம் தயாரித்து வெளியிட்டுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான ஒருங்கிணைந்த வரைவு வாக்காளா் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்களுக்கான வாா்டுவாரியான புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் வாக்காளா் பதிவு அலுவலரால் வெளியிட மாவட்ட தோ்தல் அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டதைத் தொடா்ந்து, நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாா்டு வாரியான புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

இந்த வாா்டு வாரியான வாக்காளா் பட்டியல்,  தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இந்த வசதியைப் பயன்படுத்தி, வாக்காளா்கள், தங்களின் பெயா், எந்த வாா்டு உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ளலாம்.

மேலும் வாக்காளா்கள் தங்களது வாக்காளா் அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்தும், விவரங்களை அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளா் பட்டியலில் இடம் பெறாத வாக்காளா்கள் முதலில் அவா்கள் தொடா்புடைய சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்காளா் பட்டியலில் அவா்களது பெயரை சோ்க்க வேண்டும், அதற்கு அவா்கள் தொடா்புடைய சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்காளா் பதிவு அலுவலரிடம் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT