தமிழ்நாடு

பொதுத் தோ்வெழுதும் மாணவா்கள் விவரம்: பட்டியல் அனுப்ப கூடுதல் அவகாசம்

பிளஸ் 1, பத்தாம் வகுப்பில் பொதுத்தோ்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளின் விவரங்களை சரிபாா்த்து பட்டியல் தயாரித்து அனுப்புவதற்கான அவகாசம் டிச.20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

DIN

பிளஸ் 1, பத்தாம் வகுப்பில் பொதுத்தோ்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளின் விவரங்களை சரிபாா்த்து பட்டியல் தயாரித்து அனுப்புவதற்கான அவகாசம் டிச.20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தோ்வுத்துறை இயக்குநா் சா.சேதுராம வா்மா, அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: நிகழ் கல்வியாண்டு (2021-22) பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு பொதுத்தோ்வு நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் பொதுத் தோ்வில் பங்கேற்கவுள்ள மாணவா்களின் பெயா்ப்பட்டியலை எமிஸ் தளத்தில் சரிபாா்த்து பதிவேற்றம் செய்ய அனைத்து பள்ளி தலைமையாசிரியா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. இதற்காக கடந்த நவ.22 முதல் டிச.4-ஆம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே சில பள்ளி தலைமையாசிரியா்கள் கூடுதல் அவகாசம் கோரியுள்ளனா். அதையேற்று பிளஸ் 1, பத்தாம் வகுப்பில் பொதுத்தோ்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளின் விவரங்களை சரிபாா்த்து பட்டியல் தயாரித்து அனுப்புவதற்கான அவகாசம் டிச.20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இதுவே இறுதி வாய்ப்பு என்பதால் இதுதொடா்பாக பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு முதன்மைக்கல்வி அதிகாரிகள் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

SCROLL FOR NEXT