மக்களின் பிரச்னைகளுக்கு முன்நிற்கும் இயக்கம் அதிமுக: முன்னாள் அமைச்சர் வேலுமணி 
தமிழ்நாடு

மக்களின் பிரச்னைகளுக்கு முன்நிற்கும் இயக்கம் அதிமுக: முன்னாள் அமைச்சர் வேலுமணி

மக்களின் பிரச்னைகளுக்கு  முன் நிற்கும் இயக்கமாக அதிமுக உள்ளது என ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் வேலுமணி பேட்டி அளித்தார்.

DIN

ஈரோடு: மக்களின் பிரச்னைகளுக்கு  முன் நிற்கும் இயக்கமாக அதிமுக உள்ளது என ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் வேலுமணி பேட்டி அளித்தார்.

ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க  கழக அமைப்புத் தேர்தலுக்கான வேட்பு மனு வாங்கும் நிகழ்ச்சி ஈரோடு அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. ஈரோடு கழக அமைப்பு  தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி  ஈரோடு கட்சி அலுவலகத்தில் தேர்தலில் போட்டியிடும் தொண்டர்களிடையே வேட்புமனுவை பெற்றார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் வேலுமணி கூறியதாவது:  அதிமுக உள்கட்சி தேர்தலி்ல் போட்டியிட  தொண்டர்கள் எழுச்சியுடன் வேட்புமனுவை வழங்கி வருவதாகவும், இதை பார்க்கும் போது எந்த கொம்பாதி கொம்பன் வந்தாலும்  அதிமுகவை அசைக்க முடியாது என்றார்.

அதிமுக அரசு கொண்டு வந்த  திட்டங்கள் தான் தற்போதைய திமுக அரசு செயல்படுத்தி வருவதாக தெரிவித்த வேலுமணி, மக்களின் பிரச்சனைகளுக்கு  முன்நிற்கும் இயக்கமாக அதிமுக உள்ளது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT