விவசாயிகள் மீதான அடக்குமுறையை கைவிடக்கோரி தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் 
தமிழ்நாடு

விவசாயிகள் மீதுஅடக்குமுறை: சிஐடியு, விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விவசாய திருத்தச் சட்டங்களை கைவிடக் கோரியும் , போராடும் விவசாயிகள் மீது அடக்குமுறையை ஏவுவதை கண்டித்து தூத்துக்குடி பாளை ரோட்டில் உள்ள பெரியார் சிலை முன்பு விவசாயிகள் சங்கம் , சிஐடியு சார்பில் மறியல்

DIN

விவசாய திருத்தச் சட்டங்களை கைவிடக் கோரியும் , போராடும் விவசாயிகள் மீது அடக்குமுறையை ஏவுவதை கண்டித்து தூத்துக்குடி பாளை ரோட்டில் உள்ள பெரியார் சிலை முன்பு விவசாயிகள் சங்கம் , சிஐடியு சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட துணைத் தலைவர் சங்கரன் தலைமை வகித்தார் . தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட துணைத் தலைவர் சீனிவாசன் முன்னிலை வகித்தார்.

சிஐடியு மாநில செயலாளர் ரசல், மாவட்டக்குழு உறுப்பினர்கள் அப்பாதுரை, குமாரவேல், ஜான் கென்னடி, டேன்சிங், நாகராஜ், சிபிஎம் மாநகர செயலாளர் ராஜா, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எம்.எஸ்.முத்து, மாதர் சங்க மாவட்ட செயலாளர் பூமயில், மாணவர் சங்க தலைவர் ஶ்ரீ நாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பூா் மக்களவை உறுப்பினா் மக்களிடம் குறைகேட்பு

கடைகளில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

தாம்பரம், விழுப்புரம் இடையே 2 மெமு ரயில்கள் பகுதியளவு ரத்து

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டம்: தரவு தளத்தில் நவ.15-க்குள் விவசாயிகள் பதிவு செய்யலாம்

பழனி சண்முகநதியில் 12 டன் குப்பைகள் அகற்றம்

SCROLL FOR NEXT