தமிழ்நாடு

பொதுநல அமைப்புகள் சார்பில் தேவராயன் ஏரியில் சீமை கருவேலம் மரங்கள், களர் செடிகள் அகற்றம் 

DIN

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்து ஈரோடு-பவானி பிரிவு சாலை அருகே உள்ள தேவராயன் ஏரியில் மழை நீரை சேமிக்க சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட்  சார்பில்  ஏரியில் வளர்ந்துள்ள சீமை கருவேலம் மரங்கள், களர் செடிகளை அகற்றும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

சங்ககிரியை அடுத்துள்ள ஈரோடு-பவானி பிரிவு சாலை அருகே உள்ள தேவராயன் ஏரியில் மழை நீரை சேமிப்பதற்காக  வளர்ந்துள்ள சீமை கருவேலம் மரங்கள், தேவையற்ற களர் செடிகளை சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் தலைவர் ஏ.ஆனந்தகுமார் தலைமையில்  செயலர் ராகவன், பொருளாளர் கணேஷ்,  நிர்வாகிகள் முருகேசன்,  சரவணன், பன்னீர்செல்வம், வெங்கடேஷ், பொறியாளர் வேல்முருகன், பி.கார்த்திகேயன், தரணீஷ், தரணீதரன், சந்திரபாண்டியன் உள்ளிட்ட பலர் ஒன்றிணைந்து சீமை கருவேலம் மரங்கள், களர்செடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.   

ஏரியின்  பரப்பளவு அதிகமாக உள்ளதையடுத்தும், ஏரிக்கு வரும் தண்ணீர் பாதைகளையும், களர்செடிகளை முழுமையாக அகற்றும் வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இப்பணிகள் நடைபெற உள்ளதாக பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

SCROLL FOR NEXT