தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூரில் கூலித் தொழிலாளி கொலை: 2 பேர் கைது 

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஸ்ரீவில்லிபுத்தூர் கொளூர் பட்டி தெருவைச் சேர்ந்தவர் சிவலிங்கம் (55) கூலித்தொழிலாளி அதே பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (43) மற்றும் அண்ணாமலை என்ற மகாலிங்கம் (33) இவர்கள் இருவரும் கூலித் தொழில்  செய்து வருகின்றனர்.

சிவலிங்கம் அவரது வீட்டில் மனைவியோடு இருந்தபோது அண்ணாமலை என்ற மகாலிங்கம் சிவலிங்கத்தை வெளியே அழைத்து உள்ளார். இதைத்தொடர்ந்து சிவலிங்கம் வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார். அப்போது அங்கிருந்த வெள்ளைச்சாமி என்பவர் ஓடிவந்து மறைத்திருந்த கத்தியை வைத்து தலையில் தாக்கி பின்னர் மார்பு பகுதியில் குத்தி விட்டு ஓடிவிட்டார்.

சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்து சிவலிங்கம் மகன் பார்த்தபோது சிவலிங்கம் ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். பின்னர் உறவினர்கள் துணையோடு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். மருத்துவர் பரிசோதனை செய்தபோது சிவலிங்கம் இறந்துவிட்டது தெரியவந்தது. 

இதைத்தொடர்ந்து சிவலிங்கத்தின் மனைவி புஷ்பம் (49 )நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் நகர் காவல்துறையினர் சிவலிங்கத்தை கொலை செய்த வெள்ளைச்சாமி மற்றும் அண்ணாமலை என்ற மகாலிங்கத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த கொலை சம்பவத்தால் கொளூர்பட்டி பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. முன்விரோதத்தில் கொலை நடைபெற்றதா அல்லது என்ன காரணத்திற்காக இந்த கொலை நடைபெற்றது என்பது குறித்து நகர் காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT