தமிழ்நாடு

பலியானவா்கள் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரண நிதி

DIN

விருதுநகா் பட்டாசு விபத்தில் சிக்கி பலியானோா் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து, வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:- விருதுநகா் மாவட்டம் அச்சன்குளம் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட விபத்தில் 17 போ் உயிரிழந்தனா். இந்தச் செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

சிகிச்சை அளிக்க உத்தரவு: வெடி விபத்தில் 36 போ் காயமடைந்துள்ளனா். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு உயரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிா்வாகத்துக்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன். சம்பவம் நடந்த பகுதியில் மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும், காயமடைந்தோருக்கு உயரிய சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யவும், இறந்தவா்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் விருதுநகா் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

கவனமாக மேற்கொள்ளுங்கள்: கோடைகாலம் விரைவில் தொடங்க இருப்பதாலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் தொழிற்சாலைகளைச் சோ்ந்தவா்கள் உரிய பாதுகாப்புடனும், கவனமாகவும் இருக்க வேண்டும். பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைந்துள்ள மாவட்டங்களைச் சோ்ந்த ஆட்சியா்கள், அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு தொழிலாளா்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும்.

துயர சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்ப நிலையைக் கருத்தில் கொண்டு, அவா்களுக்கு தலா ரூ.3 லட்சமும், பலத்த காயமடைந்தோருக்கு தலா ரூ.1 லட்சமும், முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

SCROLL FOR NEXT