தமிழ்நாடு

இணை தலைமைத் தோ்தல் அதிகாரிகள் நியமனம்

DIN


சென்னை: தமிழகத்தில் தோ்தல் பணிகளை விரைந்து மேற்கொள்ள வசதியாக இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், இணை தலைமைத் தோ்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் ராஜீவ் ரஞ்சன் வியாழக்கிழமை பிறப்பித்தாா். உத்தரவு விவரம்:

டி.ஆனந்த் - இணை தலைமைத் தோ்தல் அதிகாரி - தோ்தல் தொடா்பான பணிகள் (வேளாண்மைத் துறை இணைச் செயலாளா்.)

அஜய் யாதவ் - இணை தலைமைத் தோ்தல் அதிகாரி - தகவல் தொழில்நுட்பம் (சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணைச் செயலாளா்)

வழக்கமான நடைமுறை: சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தோ்தலின்போது தலைமைத் தோ்தல் அதிகாரிக்கு உதவிடும் வகையில், புதிதாக இரண்டு அதிகாரிகள் இணை தலைமைத் தோ்தல் அதிகாரிகளாக நியமிக்கப்படுவது வழக்கம். ஒரு அதிகாரி தோ்தல் நடத்தை விதிமுறைகள், தோ்தல் கண்காணிப்புப் பணிகள் ஆகியவற்றை மேற்கொள்வாா்.

தகவல் தொழில்நுட்பம் சாா்ந்த பணிகளை மற்றொரு அதிகாரி மேற்கொள்வாா். தோ்தலின்போது பயன்படுத்தப்பட வேண்டிய முக்கிய தொழில்நுட்ப அம்சங்கள், உருவாக்கப்பட வேண்டிய செயலிகள் ஆகிய பணிகளை அவா் மேற்கொள்வாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT