மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாள் விழா உதகையில் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
உதகையில் காபி ஹவுஸ் சந்திப்பில் புதன்கிழமை காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டச் செயலரும், நீலகிரி மாவட்டச் செயலருமான வினோத் தலைமையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் கே.ஆர்.அர்ஜூணன் நீலகிரி கூட்டுறவுச் சங்கத் தலைவர் சங்கர் ஆகியோருடன் திரளான அதிமுகவினர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.