சேசன்சாவடியில் நடைபெற்ற பெண் குழந்தைகள் கல்வி மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம். 
தமிழ்நாடு

பெண் குழந்தைகள் கல்வி பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சேசன்சாவடியில், பெண் குழந்தைகள் கல்வி மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் மற்றும் ஊட்டச்சத்து கண்காட்சி நேற்று நடைபெற்றது.

DIN

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சேசன்சாவடியில், பெண் குழந்தைகள் கல்வி மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் மற்றும் ஊட்டச்சத்து கண்காட்சி நேற்று நடைபெற்றது.

வாழப்பாடி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில், காட்டுவேப்பிலைப்பட்டி ஊராட்சி சேசன்சாவடி அங்கன்வாடி மையத்தில், பெண் குழந்தைகள் கல்வி மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்  நடைபெற்றது. இம்முகாமிற்கு அங்கன்வாடி மைய பணியாளர் சசிகலா வரவேற்றார்.

வட்டார ஒருங்கிணைப்பாளர் செ.கீர்த்திகாதேவி, திட்ட உதவியாளர் மு.தினேஷ் ஆகியோர், பெண் குழந்தைகளுக்கு  ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகள், ஊட்டச்சத்துப் பொருட்கள் குறித்தும், பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும் பெற்றோர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

அங்கன்வாடி மைய வளாகத்தில், ஊட்டச்சத்துள்ள காய்கறிகள், பழங்கள் மற்றும் சிறு தானியங்கள் குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு! கனிமொழி தலைமையில் ஆலோசனை!

SCROLL FOR NEXT