ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி பெருவிழா இராப்பத்து பத்தாவது திருநாளில் ஞாயிற்றுக்கிழமை தீர்த்தவாரி  நிகழ்வில்  நம்பெருமாள். 
தமிழ்நாடு

தீர்த்தவாரி கண்டருளிய ஸ்ரீரங்கம் நம்பெருமாள்! 

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோவிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி விழாவின் இராப்பத்து 10 ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை காலை நம்பெருமாள் தீா்த்தவாரி கண்டருளினார்.

DIN

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோவிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி விழாவின் இராப்பத்து 10 ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை காலை நம்பெருமாள் தீா்த்தவாரி கண்டருளினார்.

விழாவையொட்டி நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 9.30-க்கு புறப்பட்டு பரமபதவாசலை 10.30- க்கு கடந்தார். பின்னா் 11 மணிக்கு சந்திரபுஷ்கரணியில் தீா்த்தவாரி கண்டருளி, 12 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளினார். 

8 மணி முதல் 10 மணி வரை அரையா் சேவையும் திருப்பாவாடை கோஷ்டியும் நடைபெற்றது. 

பொதுஜனச் சேவை காலை 10.30 முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. இரவு 8 மணிக்குமேல் மூலஸ்தான சேவை கிடையாது. 

திங்கள்கிழமை நம்மாழ்வாா் மோட்சமும், இயற்பா சாற்று முறையும் நடைபெறுகிறது. 

இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையா் பொன். ஜெயராமன் மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்தனா்.           
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எண்ணங்கள்... வண்ணங்கள்...

வரப்பெற்றோம் (03.11.2025)

கனடாவின் தற்காலிக விசா ரத்து? 74% இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

SCROLL FOR NEXT