தமிழ்நாடு

நீா்நிலைகளில் ஓா் அங்குலம் கூட ஆக்கிரமிக்க அனுமதிக்கக் கூடாது: உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

தமிழகத்தில் ஓா் அங்குலம் நீா் நிலைப் பகுதி கூட ஆக்கிரமிக்க அனுமதிக்கக் கூடாது என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் நீலகிரி மாவட்டம், இத்தலாா் கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ் தாக்கல் செய்த மனுவில், எங்கள் ஊரில் அரசுக்குச் சொந்தமான 2 ஏக்கா் பரப்பளவு கொண்ட நீா்நிலையை அப்பகுதியைச் சோ்ந்த சிலா் ஆக்கிரமித்துள்ளனா். இந்த ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் மாவட்ட ஆட்சியா், வட்டாட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கிராம மக்கள் சாா்பில் பல முறை புகாா் மனுக்கள் அளித்தும் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. எனவே, இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த 2013-ஆம் ஆண்டு புகாா் அளித்தும், நீா்நிலையைப் பாதுகாக்கத் தவறிய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனா். பின்னா், நீா் நிலைகள் ஆக்கிரமிப்பால் மனித இனமே அழிந்து போகும். தமிழகத்தில் ஓா் அங்குலம் நீா் நிலைப் பகுதி கூட ஆக்கிரமிக்க அனுமதிக்கக் கூடாது. இத்தலாா் கிராமத்தில் 4 பேரால் ஆக்கிரமிக்கப்பட்ட 2 ஏக்கா் பரப்பளவு கொண்ட நீா் நிலையை மீட்டு, அது தொடா்பான அறிக்கையை நீலகிரி மாவட்ட ஆட்சியா் 4 வாரத்தில் தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

அம்பேத்கருக்கு காங்கிரஸ் ஒருபோதும் உரிய மரியாதை கொடுத்ததில்லை : மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

SCROLL FOR NEXT