தமிழ்நாடு

விடைபெறுகிறது வடகிழக்கு பருவமழை

DIN

தமிழகத்தில் ஜனவரி 18-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு வட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இனி பருவமழைக்கு வாய்ப்பில்லை என்றும் வட கிழக்கு பருவமழை முழுவதுமாக விலகிக் கொள்ள வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியது:

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஜனவரி 18-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு பெரும்பாலும் வட வானிலையே நிலவும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில், திங்கள்கிழமை வானம் ஓரளவு மேக மூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனி மூட்டமும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

வடகிழக்கு பருவமழையானது தென் மாநிலங்களில் இருந்து வரும் 19-ஆம் தேதி விலகுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகிறது என்றாா் அவா்.

மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பதிவாகியுள்ளது. புதுக்கோட்டை, கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, மானாமதுரை, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் தலா 20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் கல்லூரியில் கோடை கால பயிற்சி

பெண் தற்கொலை

மழை எச்சரிக்கை: மதுரை அரசுப் பொருள்காட்சி ஒத்திவைப்பு

ராஜீவ் காந்தி நினைவு தின பேரணி

காமராஜா் பல்கலை. பேராசிரியா் மீது பாலியல் புகாா்

SCROLL FOR NEXT