தமிழ்நாடு

வறண்ட வானிலை நிலவும்: வானிலை ஆய்வு மையம்

DIN

சென்னை: தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி திங்கள்கிழமை கூறியது:

தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை(ஜன.19) பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஜனவரி 20, 21 ஆகிய தேதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவக்கூடும்.

சென்னையில்...: சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வானம் ஓரளவு மேக மூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

வடகிழக்கு பருவமழையானது தென் மாநிலங்களில் இருந்து செவ்வாய்க்கிழமை (ஜன.19) விலகுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

16-ம் நூற்றாண்டு பெண்ணா? ஹரிஜா!

விமானம் மோதி கொத்து கொத்தாக இறந்து விழுந்த பறவைகள்!

காஞ்சிப் பட்டு, கல் ஜிமிக்கி.. அபர்ணா பாலமுரளி!

மோடி 3.O: 4 பெரிய மாற்றங்கள் ஏற்படும் - பிரஷாந்த் கிஷோர் கணிப்பு!

தாய்லாந்தில் மடோனா!

SCROLL FOR NEXT