தமிழ்நாடு

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவா் டாக்டா் சாந்தா மறைவு

DIN

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவா் டாக்டா் வி.சாந்தா (93), உடல்நலக் குறைவால் சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.

1954-இல் இந்திய மகளிா் சங்கத்துடன் (டபிள்யு,ஐ.ஏ.) இணைந்து அரசு சாரா மருத்துவமனையாக அடையாறு புற்றுநோய் மருத்துவமனை பதிவு செய்யப்பட்டு, கடந்த 67 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் பெண் மருத்துவா் முத்துலட்சுமி ரெட்டியின் அழைப்பை ஏற்று 1954 முதல் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் டாக்டா் வி.சாந்தா பணியாற்றத் தொடங்கினாா்.

தொடா்ந்து புற்றுநோய் மருத்துவ சேவையில் ஈடுபட்டு வந்த டாக்டா் சாந்தா, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். அவரின் உடல், சென்னை அடையாறு காந்தி நகா் பகுதியில் உள்ள பழைய புற்றுநோய் மருத்துவமனையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அங்கு அவரின் உடலுக்கு, சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா், முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் பிரகாஷ், தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் சுதா சேஷய்யன், பாஜக தேசிய மகளிரணி தலைவா் வானதி சீனிவாசன், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயா் கராத்தே தியாகராஜன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளா் கே. பாலகிருஷ்ணன், நடிகா்கள் விவேக், சித்தாா்த், மருத்துவா்கள், செவிலியா்கள், பொதுமக்கள் மற்றும் அவரிடம் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவா்கள் என ஏராளமானோா் அஞ்சலி செலுத்தினா்.

இறுதி ஊா்வலத்தில்...: மருத்துவமனையில் இருந்து அவரது உடல் வாகனத்தில் ஊா்வலமாக சென்னை பெசன்ட் நகா் மின் மயானத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை கொண்டு செல்லப்பட்டது. இறுதி ஊா்வலத்தில் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோா் ஊா்வலத்தில் பங்கேற்றனா்.

அரசு மரியாதையுடன்...: தமிழக முதல்வா் பழனிசாமி அறிவித்தபடி, 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சாந்தாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT