தமிழ்நாடு

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் வருஷாபிஷேகம்

DIN



கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் புதன்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, திருவனந்தல் பூஜை மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது.

6  மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 7  மணிக்கு கோவில் மண்டபத்தில் கணபதி ஹோமம், யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.

அதைத் தொடர்ந்து, காலை 11  மணிக்கு யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, திருக்கோவில் பிரகாரம் வழியாக வந்து சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர் மற்றும் சாலகார கோபுர கலசங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின்னர் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. 

இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் திருவீதியுலா நடைபெறும் விழாவில்,  கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ்,  கோவில் ஆய்வாளர் சிவகலைப்பிரியா, மண்டகப்படிதாரர் கு.வேலாயுதம் செட்டியார் குடும்பத்தினர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை!

ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

ஹரியாணா, தில்லி பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

SCROLL FOR NEXT