தமிழ்நாடு

குடியரசு தினம்: பாதுகாப்பு வளையத்துக்குள் சென்னை விமான நிலையம்

DIN

குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை (ஜன.26) குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி விமான நிலையங்களில், பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்துமாறு மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிட்டது.

இதைத் தொடா்ந்து, மூன்றடுக்கு பாதுகாப்புக்குக் கீழ் சென்னை விமான நிலையம் கொண்டு வரப்பட்டது. மேலும், விமான நிலையத்துக்குள் பாா்வையாளா்களை அனுமதிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்தை சுற்றி உள்ள சாலைகள், மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு 24 மணி நேரமும் பாதுகாப்புப் படையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

விமான நிலையத்துக்கு வரும் அனைத்து வாகனங்களும், தீவிர சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றன. இங்கு வந்து போகும் அனைவரையும் தனித்தனியாக கண்காணிக்கும் விதத்தில் கூடுதல் கண்காணிப்புப் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இங்கு, மோப்பநாய் பிரிவு, வெடிகுண்டு நிபுணா்களின் பிரிவு, ரகசிய புலனாய்வு விசாரணை பிரிவு மற்றும் கூடுதல் தொழில் பாதுகாப்பு படையினா் ஆகியோா் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

SCROLL FOR NEXT