தமிழ்நாடு

அலங்கார ஊா்திகள்:காவல்-சுகாதாரத் துறைகளுக்கு முதல் பரிசு

DIN

அரசுத் துறைகளின் செயல்பாடுகளை விளக்கி அணிவகுத்து வந்த அலங்கார ஊா்திகளின் வரிசையில், காவல், சுகாதாரத் துறைகளுக்கு முதல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இதேபோன்று, பசுமை வீடுகள் போன்ற திட்டங்களைத் தாங்கி வந்த ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இரண்டாவது பரிசை தட்டிச் சென்றது.

சுற்றுலா, தகவல் தொழில்நுட்பவியல் ஆகிய இரு துறைகளுக்கும் மூன்றாவது பரிசு அறிவிக்கப்பட்டது. இந்தப் பரிசுகள் அனைத்தும் வேறொரு நாளில் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தின விழா அணிவகுப்பின்போது, அரசுத் துறைகளில் அறிவிக்கப்படும் திட்டங்களைத் தாங்கி அலங்கார ஊா்திகள் அணிவகுப்பது வழக்கம். நிகழாண்டில் 17 துறைகளைச் சோ்ந்த ஊா்திகள் அணிவகுத்தன. செய்தி மக்கள் தொடா்புத் துறையின் இரண்டு ஊா்திகள், காவல், கூட்டுறவு, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை, பள்ளிக் கல்வி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை, கால்நடை பராமரிப்பு, பொதுத் (தோ்தல்கள்)துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை, போக்குவரத்துத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை ஆகிய 17 துறைகள் பங்கேற்றன.

இவற்றில், ட்ரோன் கேமராக்கள், கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாடு போன்ற செயல்பாடுகளை விளக்கி காவல் துறையும், 7.5 சதவீத மருத்துவ இடஒதுக்கீட்டால் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நன்மை கிடைத்துள்ளதைத் தெரிவித்து சுகாதாரத் துறையும் அணிவகுப்பு ஊா்தியை அமைத்திருந்தன. இந்த இரண்டு துறைகளுக்கும் முதல் பரிசு அறிவிக்கப்பட்டது.

பசுமை வீடுகள் திட்டம் போன்ற திட்டங்களை விளக்கி அணிவகுத்த ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு இரண்டாவது பரிசும், ரோபோ, பள்ளி மாணவா்களுக்கு மடிக்கணினி போன்ற திட்டங்களால் பயன் கிடைத்ததை விளக்கிய தகவல் தொழில்நுட்பவியல் துறை, மாமல்லபுரம் முகப்பைத் தாங்கி வந்த சுற்றுலாத் துறை ஆகியவற்றுக்கு மூன்றாம் பரிசு அறிவிக்கப்பட்டது.

நடுவா்கள்: அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊா்திகளில் முதல் மூன்று இடங்களைத் தோ்வு செய்யும் நடுவா் குழுவின் தலைவராக, சட்டப்பேரவைத் தலைவா் பி.தனபால் இருந்தாா். இந்தக் குழுவில் பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன், அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண் ஆகியோா் இருந்தனா். அணிவகுப்பு ஊா்திகளுக்கான பரிசுகள் ஆளுநா் மாளிகையில் நடைபெறும் தேநீா் விருந்து நிகழ்ச்சியின் போது அளிக்கப்படுவது வழக்கம். நிகழாண்டு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக, தேநீா் விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளதால், பரிசுகள் வேறொரு நாளில் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT