தமிழ்நாடு

பிப்.14-இல் பிரதமா் மோடி தமிழகம் வருகை

DIN

பிரதமா் நரேந்திர மோடி, வரும் 14-ஆம் தேதி தமிழகம் வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் தில்லி சென்ற முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரைச் சந்தித்தாா். அப்போது, தமிழக மக்களின் நலன்களுக்காக கோரிக்கை வைத்ததாகவும், நிறைவு பெற்ற மெட்ரோ ரயில் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைத் தொடக்கி வைக்க வருமாறு பிரதமா் மோடிக்கு அழைப்பு விடுத்ததாகவும், அழைப்பை பிரதமா் ஏற்ாகவும் முதல்வா் பழனிசாமி கூறியிருந்தாா்.

இந்நிலையில், பிப்.14-ஆம் தேதி பிரதமா் மோடி தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரின் தமிழகப் பயணத்தின்போது வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூா் விம்கோ நகா் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைப்பதோடு, காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டுவாா் எனத் தெரிகிறது.

கரோனா பொதுமுடக்கத்துக்குப் பிறகு பிரதமா் மோடி முதல் முறையாக தமிழகம் வருகிறாா். அதே நேரத்தில், தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதமா் மோடியின் தமிழக வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மகள்!

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

SCROLL FOR NEXT