தமிழ்நாடு

தமிழகத்தில் வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ.40 ஆயிரம் கோடி கடனுதவி

DIN

நபார்டு வங்கி நடப்பு நிதியாண்டில், தமிழக வளர்ச்சிப் பணிகளுக்காக, ரூ. 40 ஆயிரம் கோடி கடனுதவி வழங்க உள்ளதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தெரிவித்தார்.
 தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியின் (நபார்டு வங்கி) 40-ஆவது நிறுவன தினம் சென்னையில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அவர் காணொலி மூலமாக உரையாற்றிய போது, நபார்டு வங்கி
 2020-21-ஆம் ஆண்டு நிதியாண்டில், தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு ரூ.27,135 கோடிகடனுதவி வழங்கியது. நடப்பு நிதியாண்டில் ரூ. 40 ஆயிரம் கோடி வழங்க உள்ளது என்றார் அவர்.
 தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (டிக்) தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனரான ஹன்ஸ்ராஜ் வர்மா பேசுகையில், தற்போது ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து பணியாற்றினால் மட்டுமே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்' என்றார்.
 நபார்டு வங்கியின் தமிழ்நாடு மண்டல அலுவலக தலைமைப் பொது மேலாளர் எஸ்.செல்வராஜ் பேசியது:
 நபார்டு வங்கி ஊரக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, விவசாயிகள் முன்னேற்றம், வங்கிக் கடனுதவியை அதிகரித்தல், ஊரக உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் நபார்டு வங்கி உதவி வருகிறது என்றார் அவர்.
 இந்நிகழ்ச்சியில், சிறப்பாக பங்களித்த வங்கிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக, இந்தியன் வங்கியின் செயல் இயக்குநர் இம்ரான் அமின் சித்திக் முன்னிலையில் இந்தியன் வங்கிக்கும், நபார்டு வங்கிக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. நபார்டு வங்கி தயாரித்த கடல்பாசி வளர்ப்பு குறித்த கையேடும் வெளியிடப்பட்டது.
 இந்திய ரிசர்வ் வங்கியின் சென்னை அலுவலக தலைமைப் பொது மேலாளர் சுமன் ரே, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பொதுமேலாளர் புவன் சந்திர சர்மா ஆகியோர் உள்ளிட்ட பல்வேறு வங்கிகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT